‘GOAT’ – திரை விமர்சனம்

LION is always LION

படத்தின் ஆரம்பமே கேப்டன் வருகிறார். ஒரு நாட்டிற்கு ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதியையும் பிடிக்க,  ஒடும் ரயிலில் தீவிரவாதிகளுடன் சண்டையும் செய்கிறார். தியேட்டரே ஆரவாரத்தில் மிதக்கிறது. அப்போது ஆரம்பிக்கும் வேகம் படம் முடியும் வரை அதே வேகத்தில் செல்கிறது. விஜய் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இப் படம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப் படத்தின் கதை :

SATS (Special Anti-Terrorist Squad) எனப்படும் ரகசிய படையின் தலைவரான விஜய் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் தீவிரவாத சூழ்ச்சிகளை முறியடிக்கிறார்.

ஒரு சமயம் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாங்காங்கிற்கு செல்கிறார். செல்பவர் தனது SATS டீமுடன் ( பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம்) செல்லும் போது, போதாகுறைக்கு தனது மனைவி மற்றும் 5 வயது மகனுடன் செல்கிறார்.

அங்கு தனது மகனையே பறிகொடுக்கிறார்.. இதனால் வாழ்க்கையே வெறுத்துப் போன விஜய் அந்த SATS (Special Anti-Terrorist Squad)  வேலையே வேண்டாம் என்று immigration அதிகாரியாக வாழ்க்கையை நடத்தி வருகிறார். 15 வருடம் கழித்து மறுபடியும் ரஷ்யாவிற்கு செல்லும் வேலை SATS அமைப்பிடம் இருந்து அழைப்பு வருகிறது, ஆனால்  எங்கும் செல்ல முடியாது என்று விஜய் மறுக்கிறார். immigration சம்பந்தப்பட்ட வேலைதான் எந்த பிரச்சனையும் வராது என்று சம்மதிக்க வைக்கிறார்கள்.

மாஸ்கோவுக்கு செல்லும் விஜய்க்கு இன்ப அதிர்ச்சி, விஜய் அங்கே தன்னைப் போல் உருவம் கொண்ட இளைஞரை சந்திக்கிறார்.

இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருந்த தனது மகன் தான் அந்த இளைஞன் என்பது தெரிய வருகிறது. மகனை காப்பாற்றி தன்னுடன் சென்னைக்கு அழைத்து வரும்  விஜய், தனது மகன் மூலம் இழந்த அனைத்தையும் திரும்ப பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் போது, திடீரென்று அவருடன் இருப்பவர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலையாளி யார்?,  எதற்காக விஜய் மற்றும் அவரது குழுவினரை குறிவைத்து கொலை செய்கிறார்?  என்பதை எதிர்பாராத திருப்பங்களுடனும் , பாச போராட்டங்களுடனும் சொல்வது தான்… படத்தின் மீதி கதை..

மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ், ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். யோகிபாபுவும், பிரேம்ஜியும் சிரிக்க வைக்கிறார்கள்.

விஜய் ரசிகர்களுக்கு, ஏற்றவாறு ஆக்‌ஷன், டான்ஸ்  கிரிக்கெட் என அனைத்தையும் வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.. ‘‘ஹீரோவும் விஜய்.. வில்லனும் விஜய்..’’ என இருவருக்கான திரைக்கதையை அமைத்து விளையாடி இருக்கிறார் வெங்கட் பிரபு.

மொத்ததில் ‘GOAT’ ப்ளாக் பஸ்டர் திரைப்படம்
LION is always LION

Leave A Reply

Your email address will not be published.