ARM – திரைவிமர்சனம்

அஜயனின் ரெண்டாம் மோஷனம்’ (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்பதன் மலையாள சுருக்கம் தான் ‘ARM’.

கதை…

விண்வெளியில் இருந்து ஒரு பிரம்மாண்டமான எரிகல் ஒன்று பூமியில் விழகிறது. அந்த எரிகல் விழுந்த இடத்தை  சுற்றிலும் உள்ள கிராமங்கள் செழிப்பாக மாறுகிறது. இதை அறிந்த ஒரு மன்னர் அந்த எரிகற்களை தங்களது ஊருக்கு எடுத்து சென்று அதனுடன் சில ரசாயணங்களை கலந்து ஒரு “சியோதி” என்ற அதிசய விளக்கை செய்து வழிபட்டு வருகின்றனர்.

அந்த விளக்கு எப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, மகன், பேரன் (Tovino Thomas) கைகளில் சிக்கியது? அதனால் அவர்களின் குடும்பம் எப்படியெல்லாம் பரம்பரை பரம்பரையாக பாதிக்கப்பட்டது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் படம் தான் ARM.

தாத்தா, மகன், பேரன் என மூன்று கேரக்டரில் Tovino Thomas நடித்திருக்கிறார். அதிலும் அந்த மணியன் கேரக்டர் அபாரம்.

நாயகிகளாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, கீர்த்தி ஷெட்டி மூவரும், சிறப்பாக நடித்துள்ளனர். கீர்த்தி ஷெட்டி இளமை துள்ளல் ரகம், அதுவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கண்களில்  காமமும் காதலும் தெறிக்கிறது.

வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமன்,  பொற்கொல்லனாக ஜெகதீஷ், நாயகனின் தாயாக ரோகினி,  நண்பனாக ஜோசப் படத்தின் கதையோடு பயணித்துள்ளனர்.

ARM படம் வித்தியாசமான அனுபவம்.

Leave A Reply

Your email address will not be published.