‘நீல நிறச் சூரியன்’ படத்தின் இயக்குனர் சம்யுக்தா விஜயன். தமிழ் சினிமாவில் திருநங்கை இயக்கிய முதல் திரைப்படம்.
தன் வாழ்க்கையில் நடந்த மற்றம் சந்தித்த சம்பவங்களை தொகுத்து ஒரு திரைப்படமாக வழங்கியிருக்கிறார் இயக்குனர் சம்யுக்தா விஜயன், தன் வாழ்க்கையையே படமாக எடுத்துள்ளதால் மெல்லிய உணர்வுகளைக் கூட, உணர்வுபூர்வமா காகவும், அழகாகவும் ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கியிருக்கிறார்.
கதை….
ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சம்யுக்தா விஜயன், பிறவியில் ஒரு ஆண். ஆனால் இவருக்குள் பெண்மை தன்மையை அடிக்கடி உணர்வதால் பெண்ணாக மாறி வாழ ஆசைப்படுகிறார்.. ஆனால் இந்த சமூகம், பெற்றோர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற தயக்கத்திலேயே 25 வயது வரை ஒரு வித தயக்கத்துடனும், குழப்பத்துடனும் வாழ்ந்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் பெண்ணாக மாற முடிவெடுக்க, வீட்டிலும் பள்ளியிலும் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது.. ஆனாலும் தன் முடிவில் உறுதியாக இருக்கும் இவர் பெண்ணாக மாறுகிறார்.. அதன் பிறகு இவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்….
கிட்டி, நக்கலைட்ஸ் பிரச்ன்னா பாலசந்திரன், கஜராஜன், கீதா கைலாசம், பள்ளி துணை முதல்வர் மணிமேகலை, சம்யுக்தா விஜயனின் அக்காவாக வரும் செம்மலர் அன்னம் உள்ளிட்டோரின் நடிப்பு அபாரம். மேலும் சம்யுக்தா விஜயனின் தோழியாக வரும் ஹரிதா, பெண்ணாக மாற நினைக்கும் தன் ”நண்பனுக்கு” உற்ற துணையாக இருக்கும் இவரது நடிப்பு பாராட்டுக்குரியது…
ஆக இந்த ‘‘நீல நிறச்சூரியன்’’ க்கு… விருது நிச்சயம்