கே.பிரபாத் நாயகனாக நடிக்கும் ‘கருப்பு பெட்டி’
18-ம் தேதி ரிலீஸ் ஆகிறது
ஜேகே பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.பிரபாத் தயாரித்து நடிக்கும் படம், ‘கருப்பு பெட்டி’. தேவிகா வேணு நாயகியாக நடித்துள்ளார். மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை எஸ்.தாஸ் இயக்கியுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் கூறுகையில்,
“நாயகனுக்கு ஏற்படும் ஒரு சாதாரணப் பிரச்சினை அவரது குடும்பத்துக்குள் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருகிறது என்பது தான் படத்தின் கதை.
மனரீதியான பிரச்சினை ஒன்றை இதில் பேசியிருக்கிறோம். விமானத்துக்குக் கருப்பு பெட்டி என்பது முக்கியம். விபத்து நடந்தால் அதைத்தான் முதலில் தேடுவார்கள். இந்தக் கதையிலும் கருப்பு பெட்டி போன்ற முக்கியமான ஒன்று தான் கதையில் ட்விஸ்ட்டாக இருக்கிறது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம். ’’என்றார்.
இத் திரைப்படம் வரும் 18-ம் தேதி படம் வெளியாகிறது.